வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
                                     (அதிகாரம்:கல்வி குறள் எண்:399)

நா நெகிழ் பயிற்சி

          பேசிப்பழகு குழந்தைகள் பேசுவதே ஒரு விளையாட்டு தான், தான் தவறாகப் பேசுகிறோமென்று தெரியாமலேயே பேசிக்கொண்டிருக்கும்.

சில தமிழ் மொழி நா நெகிழ் பயிற்சி வாக்கியங்களைக் காண்போம்.

           1. ஓடற நரியில ஒரு நரி கிழ நரி
              கிழநரி முதுகுல ஒரு பிடி நிற மயிர்.

           2. யார் தச்ச சட்டை
              தாத்தா தச்ச சட்டை

           3. கொக்கு நெட்ட கொக்கு,
              நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

           4. கடலோரத்தில் அலை
              உருளுது பிரளுது
              தத்தளிக்குது தாளம் போடுது.

           5. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே
              பைத்தியங்களுக்கு வைத்தியம்
              பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால்
              எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்
              பைத்தியங்களுக்கு வைத்தியம்
              பார்க்கிற வைத்தியர் வந்து அந்த
              பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

                     இந்த தொடர்களை உச்சரிக்கச் சொல்லும் போது தவறாக உச்சரிக்கும் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால், அந்த குழந்தை றகர ரகரங்களும் ணகர னகரங்களும் லகர ளகரங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் வரும். இவைகளை உச்சரிப்பதற்குக் குழந்தைகள் தடுமாறும், அத்தடுமாற்றத்தினை நீக்குவதற்கு இந்த விளையாட்டுகள் பயன்படுகின்றன.

தமிழ் சான்றோர்கள்

                                                

சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர்கள்

                       
events

➤➤ இலக்கியச் சந்திப்பு - ஜனவரி 2024
அடுத்த நிகழ்வு (75ஆவது சந்திப்பு):
நாள்: 13-01-2024
நேரம்: பகல் 5.00 மணிக்கு
இடம்: பொங்கோல் சமூக மன்றம்


1 / 10
2 / 10
3/ 10
4 / 10
5/ 10
6/ 10
7/ 10
8 / 10
9/ 10
10/ 10

மூதுரை

வெண்பா :6

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்:

தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.